வவனியாவில் இன்று 14 காலை 7.30மணியளவில் இ.போ.ச பேருந்து நிலையத்தில் வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம் மாவட்ட முதியோர் சங்கமும் இணைந்து நடாத்திய ; மகிழ்வோர் மன்றம் முதியோர் தின விழிப்புணர்வு செயற்றிட்டம் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு. எஸ். எஸ். ஸ்ரீனிவாசன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். பி. ரோஹன புஸ்பகுமார, செட்டிகுளம் பிரதேச செயலாளர், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர், மாகாண விவசாயப்பணிப்பாளர் என திணைக்களத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கல்வியற்கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்துகொண்டதுடன் அரசாங்க அதிபரினால் முதியோர் தின் விழிப்புணர்வு செயற்றிட்டத்தில் பேருந்துகளின் பயணிகளின் கவனத்திற்கு ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டது. அத்துடன் பேருந்து நிலையத்திலிருந்து  நகரசபை கலாச்சார மண்டபத்தில் மகிழ்வோர் மன்றத்தின் இரண்டாம் நிகழ்வகள் இடம்பெற்றதுடன் முதியோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் முதியோர் தினத்தையொட்டி நடாத்தப்பட்ட கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.