அம்பாரை மாவட்ட முன்பள்ளி பணியகத்தின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற அதிபர் ஏ.சீ.சைபுதீன் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்பள்ளி பணியகத்தின் பணிப்பாளராக நியமனம் பெற்ற ஓய்வுபெற்ற ஓய்வுபெற்ற அதிபர் ஏ.சீ.சைபுதீன் நேற்று (27) தனது கடமையினை பொறுப்பேற்றார்.

தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோரது வேண்டுகோளுக்கினங்கவே கிழக்கு மாகாண ஆளுநர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

பணிப்பாளர் சைபுதீன் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றிய ஓருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.ஜே.எம்.சஜீத்)