சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மேலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாராளுமன்ற அமர்வு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடையும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதன்படி 7.30 மணி வரை இடம்பெறவிருந்த வரவு செலவுத்திட்ட விவாதம் 6 மணிக்கு நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.