அநுராதபுர மாவட்டத்தின் 32 வது புதிய அஹதிய்யா சன்மார்க்க பாடசாலையொன்று எதிர்வரும் 03 ஜாயிறு மரதங்கடவலையில் புதிதாக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்படவுள்ளன.
அநுராதபுர மாவட்டசெயலாளர் அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளத்தின் ஏற்பாட்டில் மரதங்கடவல அல் அமீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் அநுராதபுர மாவட்ட அஹதிய்யாப் பாடசாலைகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மரதங்கடவல அல் அமீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் ,அநுராதபுர மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனச் செயலாளர் எம்.ஆர்.எம்.ரனீஸ் தலைமையில் அல் அமீன் அஹதிய்யா பாடசாலை என்ற பெயரில் இப் பாடசாலை புதிதாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வில் அஹதிய்யா பாடசாலைகள் மத்திய சம்மேளன தேசிய அமைப்பாளர் தேசமான்ய அல் ஹாஜ் அஸ்வர் இதில் பிரதம அதிதியாகவும்,அநுராதபுர மாவட்ட சம்மேளத் தலைவர் எம்.ஏ.எம்.தில்சான் சிறப்பு அதிதியாகவும் மற்றும் மாவட்ட சம்மேளன பிரதி நிரதி நிதிகளும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நுராதபுர மாவட்டத்தில் இதுவரையில் 31 அஹதிய்யா சன்மார்க்கப் பாடசாலைகள் இயங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.நீண்ட காலமாக இங்குள்ள பெற்றோர் விடுத்து வந்த கோரிக்கை தற்பொழுது நிறைவேற்றப் படுவதையிட்டு இப் பகுதி பெற்றோர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம் நிருபர் - ஏ.ஆர்.எம்.ரபியூதீன்