கலாநிதி ஏ.எம். ஏ அசீஸ் மன்றத்தினால் அசீஸ் பற்றிய நினைவுதின பேச்சும் அசீசும் தமிழும் எனும் நுால் வெளியீட்டும் விழாவும் நேற்று(29) கொழும்பு -07 மகாவலி கேந்திர நிலையத்தில் அசீஸ் மன்றத்தின் தலைவா் காலித் பாருக் தலைமையில் நடைபெற்றது. படத்தில் அவுஸ்திரேலியா வெஸ்டர்ன மொ்டொச் பல்கலைக்கழக பேராசிரியா் அமீர் அலி (காத்தான்குடி) அவா்கள் நினைவுப் பேச்சினை உரையாற்றினாா். இந் நிகழ்வின் போது புனா்வாழ்வு அமைச்சின் முன்னாள் பணிப்பாளர் ஏ.எம் நஹியா எழுதிய அசீசும் தமிழும் எனும் நுால் சிறப்பு பிரதி ஜாமிஆ நளீமியா பணிப்பாளா் காலாநிதி எம்.ஏ.எம் சுக்ரிக்கு வழங்குவதையும் அருகில் வை.எம்.எம். ஏ தலைவா் எம். நபீல், கொழும்பு சாஹிராக் கல்லுாாி அதிபா் றிஸ்வி மரிக்காரும் அருகில் காணப்படுகின்றனா.
அத்துடன் அசீஸ் பற்றி அவரது மாணவனும் கொழும்பு சாஹிரா பழைய மாணவருமான ரத்தின தேரோ உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.