பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் உள்ளூர் தொடரான நெஷனல் இருபதுக்கு-20 கிண்ண போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியொன்றில் புதிய சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
லாஹுர் வைட்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் அணிகள் மோதிய போட்டியில், லாஹுர் வைட்ஸ் அணியைச் சேர்ந்த ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் 209 ஓட்டங்களை விளாசியுள்ளனர்.
இந்த ஓட்ட எண்ணிக்கையானது இருபதுக்கு-20 போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவாகியுள்ளது.
லாஹுர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கம்ரான் அக்மால் 71 பந்துகளில் 150 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் விளாசியுள்ளார்.
அவருடன் இணைந்து துடுப்பெடுத்தாடிய சல்மான் பட் 49 பந்துகளுக்கு 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, இறுதிவரை ஆட்டமிழக்கமால் களத்தில் நின்றுள்ளார்.
இந்த போட்டியில் கம்ரான் அக்மால் 12 ஆறு ஓட்டங்கள் மற்றும் 14 நான்கு ஓட்டங்களை விளாசியுள்ளார்.
இதன்படி இங்கிலாந்தின் கவுண்டி அணியான கென்ட் அணி வீரர்கள் ஜோ டென்லி மற்றும் டேனியல் பெல் ஜோடி நெட்வெஷ்ட் டி20 பிளாஸ்டில் பெற்றுக்கொண்ட 207 என்ற இணைப்பாட்ட சாதனையை அக்மால் மற்றும் சல்மான் பட் ஜோடி முறியடித்துள்ளது.