இலங்கையின் தமிழ் வானொலித் துறையில் புதிய வானொலி அனுபவத்தை வழங்குவதற்கு புதிய தமிழ் வானொலி நாளை மறுதினம் டிசம்பா் 1ஆம் திகதி கெப்பிட்டல் எப்.எம் 94.0 - 103.1 அலை வரிசை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவா்களினால் கலாதாரி ஹோட்டலில் ஆரம்பித்து வைக்கப்படுவதாக இவ் வானொலியின் தலைமையதிகாரி சியா உல் ஹசன் தெரிவித்தாா்.
நேற்று கொழும்பு சிவிமீங் களபில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தாா். இந் நிகழ்வினை மகிழ்விக்க இந்திய நடிகை சினேகா மற்றும் திறைப்பட பின்னனிபாடகல்களும் இலங்கை வர தரவுள்ளனா். அத்துடன் கெப்பிட்டல் எப்.எம் அனுசரனையில் மூன்று மொழிகளையும் சா்ந்த சிரேஸ்ட ஒலிபரப்பாளா்கள் ஜனாதிபதியினால் கொளரவிககப்படுகின்றனா். தமிழ் மொழியில் உலக அறிவிப்பாளா் பி.எச். அப்துல் ஹமீத், ஆங்கில மொழியில் அநுர டயஸ் பண்டார, சிங்கள மொழியில் சுனில் விஜயசிங்க ஆகியோா் கொளரவிக்கப்படுகின்றனா்.
லிவா் புல் கம்பணியின் ரைஸ் மீடியா வலையமைப்பின் நிறுவனத்தினால் கெப்பிட்டல் எப்.எம் ஆரம்பிக்கப்படுகின்றது. முதற் கட்டமாக வடக்கு கிழக்கினை தளமாகக் கொண்டு தமிழ் மொழியிலும் அடுத்த வருடங்களில் ஏனைய மொழிகளிலும் அலைவரிசைகள் ஆரம்பிக்கப்படும்.
எமது நிறுவனம் ஏனைய வானொலிகளோடு போட்டித்தன்மை கேட்டாள் பணம், குருந்செய்தி அனுப்பினால் பணம் என்ற போட்டித் தன்மையில்லாது சகல இன மத தேசிய ஒற்றுமை சிறந்த செய்தி உள்நாட்டு கலைஞா்களுககு களம் அமைத்துக் கொடுத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது எமது அலைவரிசை கிருலப்பனை தேவிகா கார்டனில் இருந்து முழு இலங்கைக்கும் தமது ஒலிபரப்பினை வழங்குகின்றது.
குறுகிய காலத்தினுள் நேயா்களின் இதயத்திற்கு நெருங்கிய தோழனாய் மாறவிருக்கின்றது கெப்பிட்டல் எப்.எம். ஆனது களிப்புட்டும் ஒரு பொழுதுபோக்கு வானொலியாக மாத்திரமல்லாமல் சமுக பொறுப்புள்ள வானொலியாக சமுகத்தின் குறை நிறைகளை சீர்துாக்கி சமன் செய்யும் பணியையும் ஆற்றவுள்ளது.