அஹமட் இர்ஷாட் (ஓட்டமாவடி )

நீ மரணித்துவிட்டதாக
எல்லோரும்
சொல்கிறார்கள்
ஆனால் 
என்னால்
நம்பமுடியவில்லை! 
****
உன்
அழகு சிரிப்பு 
முந்திக் கொண்டு
ஸலாம் கூறும் 
உன் குணம்
அன்புக் கைகுலுக்கல்
எல்லாம் 
என் மனக்கண் முன்
நீங்காமல் 
நிழலாடுகிறது!
****
தாறுஸ் ஸலாத்துக்கு
தொழுகைக்கு
வரும் போதெல்லாம்
எனக்கு 
ஸலாம் கூறி 
கைதந்து உன்
வசீகரப் புன்முறுவலை
உதிர்க்காமல்
செல்லமாட்டாய் !
****
பஜ்ர் தொழுகைக்கு 
நான் வரத்தவறினாலும்
ஒருநாள் கூட
நீ தவறியதில்லை !
நான் மறுக்கின்ற போதும்
என்னைத் 
தேநீர்க்கடைக்கு
வலுக்கட்டாயமாக
அழைத்துச் சென்று 
உண்ணவும் தந்து
வீடு கொண்டு செல்லவும்
பொதி தந்தனுப்பும்
உன் ஈகைக்கு
நீயே நிகர் !
****
இன்று வரை
தாறுஸ் ஸலாம்
சுற்று வட்டாரமே
உன்னைப் பிரிந்த
சோகத்தில் தன்
மகிழ்ச்சியை
தொலைத்து நிற்கிறது! 
****
நீயொரு
சுன்னாவாதியாயிருந்தும்
உன் உறவுகளில்
உலமாக்கள் பலரிருந்தும்
ஒருவர் கூட உன்
ஜனாஸா நல்லடக்கத்தை
சுன்னா வழியில்
செயற்படுத்த
நினைத்துக் கூட
பார்க்க வில்லையெனும்
துயரம் என்
தொண்டையை
அடைக்கின்றது
கண்களை
குளமாக்குகின்றது!
****
உன் உறவினர்
ஒருவராவது
எமக்கு 
உரம் தந்திருந்தால்
எம் உயிரைக் 
கொடுத்தேனும்
உன்னை சுன்னா
வழியில் நல்லடக்கம்
செய்திருப்போம்!
****
உறவுகளின்
ஒத்தாசை 
கேள்விக் குறியானதால்
பல ஜனாசாக்களிலும்
திருமணங்களிலும்
குழப்பவாதிகள் என்ற
பட்டமே எமக்கு 
பரிசானது! 
அதனால்தான்
துயரங்களைப்
புதைத்து
மௌணப்போர் நடத்தி
ஓரமாய் 
ஒதுங்கி நின்றோம்
****
பொறுத்திரு நண்பா!
உன் கொள்கைக்கு
மாற்றமாய் உன்
ஆத்மாவை 
சாந்தப்படுத்துவதாய்
கத்தங்கள் ஓதி 
வயிறுபுடைக்க
விருந்துண்பர்
பித்அத்வாதிகள் !
****
யாரின் விருந்துகளும்
உனக்குத் தேவையில்லை 
கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தாரின் 
கூட்டுத் துஆவும்
உனக்குத் தேவையில்லை 
அன்று திரண்டு
உனக்காய்
கண்ணீர் சிந்திப்
பிரார்த்தித்த
உள்ளங்களின்
இரஞ்சுதல் ஒன்றே
உனக்குத் போதும் நீ 
பிர்தவ்ஸ் நுழைய !

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله وأدخله دارا خيرا من داره وجارا خيرا من جاره ونقه من خطاياه كما ينقى الثوب الابيض من الدنس اللهم اغسل خطاياه بالماء والثلج والبرد وأدخله فسيح جناتك يارب العالمين.
ஏ.எல்.பீர் முகம்மது.. மீள் பதிவு ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்