பர்மா அகதிகளை தாக்கிய விவகாரத்தில் விளக்கமறியல் வைக்கப்பட்ட டன் ப்ரியசாத்,சாணக்க இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி நவம்பர்-13 வரை இருவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, பர்மா அகதிகளை தாக்கிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நிலையில்
2 அடையாள அட்டைகளுடன் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்க மறியல் வைக்கப்பட்டுள்ள ரத்னசார தேரோவும் இன்று அடையாள அணிவகுப்பிற்காக நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மேற்படி 9 நபர்களுக்குமான அடையாள அணி வகுப்பு பிற்போடப்பட்ட நிலையில் எதிர்வரும் மாதம் (November) 13 ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.