-உங்கள் நண்பன் தமீம்-

உன் இதயம் யாருக்கும் தீங்கு நினைக்காமல் வாழ்ந்தால் தனிமை இனிமைதான்

காழ்புணர்ச்சி கொண்டு  யாரையும் வீழ்த்த நினைக்காத வரை தனிமை இனிமை தான்

பொறாமை உன் இதயத்தை பிழந்து ஆட்சி செய்யாத வரையில் தனிமை இனிமைதான்

பிறர் வெற்றியில் நற்குணம் கொண்டு வாழ்த்தாமல்   தூர்ரினால் தனிமை கொடுமை தான்

மற்றவர் துண்பத்தில் குழிர் காய்ந்து இன்பத்தில் தீ மூட்டாதவரையில் தனிமை இனிமைதான்

வண்மாய் மனிதனையும் வாசமாக அன்பையும்
கொண்டு இறைவன் வரைந்தான் அழகிய ஓவியமாய் இந்த உலகை

அழகிய கவிஞனாய் கலைஞனாய் ரசனை கொண்ட படைப்பாய் படைத்தான் அந்த இறைவன்  மனிதனை

அன்பால் அழங்கரித்து
பாசத்தால் விதை போட்டு அழகாய் வளர்ப்போம் பூமியெனும் பூந்தோட்டியை

சமாதானம் ஆகுவோம் அன்பு காட்டுவோம்
அக்கறை கொள்வோம்
விலகி சென்றவர்களையும் விலகாத வண்ணம். வெறுத்து செல்பவர்களையும் மறக்காத வண்ணம்.அன்பு காட்டுவோம் நேசம் கொள்வோம் அன்பால் அழங்கரிப்போம் உலகெனும் பூந்தொட்டியை