வவுனியா பேரூந்து நிலையத்தில் வவுனியா போதைப் பொருள் தடுப்பு பிரிவுப் பொலிசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் இன்று கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சி பகுதியில் இருந்து அனுராதபுரம், தம்புதேகம பகுதிக்குச் செல்லவிருந்த நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் நின்ற குடும்பஸ்தரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொலிசார் குறித்த நபரின் கைப்பையினை சோதனை செய்த போது அதில் ஒரு கிலோ கேரளா கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து, கஞ்சா மீட்கப்பட்டதுடன், குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம், தம்புதேகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.