வவுனியா பூவரசங்குளம் குருக்களூர் பகுதியில் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட அதிரடிப்படையினர் நேற்றைய தினம்(30.10) 3அடி தொடக்கம் 5அடி வரையிலான மூன்று யானை தந்தங்களை மீட்டுள்ளதுடன் குருக்கள் புதுகுளத்தை சேர்ந்த வேலன் சிவலிங்கம்,வெளிக்குளம் பகுதியை சேர்ந்த ராஜசாமி சிவராசா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்
கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களும் கைது செய்யப்பட்ட நபர்களும் நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் வவுனியா பொலிஸாரிடம் விசேட அதிரைப்படையினர் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
-சுடர் மற்றும் சிவக்குமார்-