அ/நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கமொன்றை அமைத்து பாடசாலையின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு இலங்கையின் நாலா புரங்களிலும் வாழும் பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்றினைத்து பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஒன்றை அமைக்கும் எண்ணத்தில் பாடசாலை நிருவாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

எதிர்வரும் 04 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நாச்சியாதீவு எஸ்.எம்.எஸ்.வரவேற்பு மண்டபத்தில் இவ் அங்குரார்ப்பன கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எச்.எம்.சஹீட் தெரிவித்தார்.இக் கூட்டத்தில் இப் பாடசாலையில் கல்வி கற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்பொழுது உயர் பதவிகளில் உள்ளவர்கள்,மற்றும் பல்வேறு துறைகளில் உள்ளவர்கள்,பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.


இப் பாடசாலை 1920 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை பல்துறை சார் அறிஞர்கள் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரம் நிருபர் / ஏ.ஆர்.எம்.ரபியூதீன்.