வளர்ந்து வரும் மலையாள நடிகை துர்கா கிருஷ்ணா. தற்போது விமானம் என்ற படத்தில் பிருத்விராஜுடன் நடித்து வருகிறார்.
கடந்த பல நாட்களாக துர்கா கிருஷ்ணாவின் தொலைபேசிக்கு ஒருவர் தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி வந்திருக்கிறார்.
அவரை பலமுறை துர்கா எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் அந்த நபரின் புகைப்படத்தை இணையத்தில் தேடி எடுத்து தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். அதோடு பேஸ்புக்கில் அவர் எழுதியிருப்பதாவது:
நான் கோழிக்கோட்டை சேர்ந்த துர்கா கிருஷ்ணா. என் சகோதர சகோதரிகளே நானும் உங்களில் ஒருத்தி. உங்களில் எத்தனை பேர் உண்மை சகோதரர்கள் என்பது தெரியவில்லை. உங்களில் எத்தனை பேர் நரிகள். அதாவது பகலில் நல்லவர்கள் போன்றும், இரவானால் செக்ஸ் ஆசையை வெளிப்படுத்தி உண்மை நிறத்தை காட்டுபவர்கள் என்றும் தெரியவில்லை.
அத்தகைய நரிகளுக்கு மனைவி, சகோதரி, தாய், 2 வயது குழந்தை அல்லது 70 வயது பாட்டி என்று அடையாளம் தெரியாது.
அவர்கள் புகைப்படங்கள், காணொளிகள், மெசேஜ்கள் அனுப்பி தங்களின் செக்ஸ் ஆசையை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு வயது, உறவு எல்லாம் முக்கியம் இல்லை எதிர்பாலினம் தான் முக்கியம்.
என் சகோதரர்களுக்கு ஒரு கோரிக்கை. உங்களின் சகோதரிகளை சைக்கோக்களிடமிருந்து காப்பாற்ற உடனே நடவடிக்கை எடுங்கள். கல்வி முறையிலே இது போன்ற விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்காது. இவ்வாறு துர்கா கிருஷ்ணா எழுதியுள்ளார்.
இது மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

