முஸ்லிம்கள் மீது காழ்புணர்ச்சி கொண்ட மற்றொரு சம்பவம் இன்று தெனியாய நகரில் இடம்பெற்றுள்ளது!
பெரும்பான்மை இனத்தவர்கள் வாழும் தெனியாய பகுதியில் தொன்றுதொட்டு முஸ்லிம்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் பேருவளயை சேர்ந்த சகோதரர் ஒருவர் தெனியாய நகரில் கடையொன்றை புதிதாக திறந்துள்ளார், வியாபரமும் களைகட்டியிருக்கிறது!
இதனை கண்காணித்து வந்த காழ்ப்புணர்ச்சியாளர்கள் இன்று திட்டமிட்டு ஒரு பிரச்சினையை உருவாக்கினர்.
குறித்த கடைக்கு வந்து ஒருவர் மணிபேர்ஸ் ஒன்றை வாங்கி சென்றுள்ளார்.
சிறிது நேரத்தின் பின் அந்த நபர் பிக்குகள் சிலருடனும் அடாவடி கும்பலுடனும் கடைக்கு வந்து தான் வாங்கி சென்ற “மணிபேர்ஸில்”
“தர்ம சக்கரம்” பொதிக்க பட்டிருந்ததாகவும் அது பெளத்த மதத்தை அவமதிக்கும் செயலெனவும் கூறி பிரச்சினையை உருவாக்கினர்.
இதனால் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது!
பின்னர் பொலிசாரும் அங்கு வரவழைக்கப்பட்டு குறித்த வர்த்தகநிலையம் உடனடியாக மூடப்பட்டது.
கடை உரிமையாளரை பொலிசார் அழைத்து சென்று விசாரித்தபின் அது தர்மசக்கரமில்லை “கப்பல்சக்கரம்” என்று உறுதியான பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் அப்பகுதிக்கு வந்த கும்பலின்று முஸ்லிம்களின் கடைகளுக்கு சென்று இனிமேல் இங்கு யாரும் தொப்பி அணிய கூடாதென்றும் தாடி வைக்க கூடாதென்றும் மிரட்டல் விடுத்ததுடன் புதியவர்களை நகருக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறி சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.