ஏ.ஆர்.எம்.ரபியுதீன் (ஊடகவியலாளர் – நாச்சியாதீவு )
அநுராதபுரம்/ நாச்சியாதீவு படையப்பா விளையாட்டுக் கழகம் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்து நடாத்தும் பகல் இரவு உதைப் பந்தாட்ட சுற்றுப் போட்டி இம் மாதம் 29 – 30 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிகளில் நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய பஸ்மி விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக இடம்பெறுகின்றது .
படையப்பா விளையாட்டுக் கழகத் தலைவர் ஐ.எம்.தாசிம் தலைமையில் இடம்பெறும் இப் போட்டியில் நாடளாவிய ரீதியில் எந்தவொரு விளையாட்டு கழகமும் இதில் பங்கு பற்ற முடியுமென தெரிவிக்கப் பட்டுள்ளது .அணிக்கு ஏழு பேர் கொண்ட இப் போட்டித் தொடரில் பங்கு பற்ற விரும்பும் விளையாட்டுக் கழகம் ரூபா மூவாயிரம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என கழகம் தெரிவிக்கின்றது .
இங்கு வெற்றி பெரும் அணிக்கு ரூபா 75 ஆயிரம் பணப்பரிசும் ,வெற்றிக் கிண்ணமும் ,இரண்டாம் பரிசாக 35 ஆயிரம் ரூபா பணப் பரிசும் ,வழங்கி வைக்கப்படவுள்ளன .
இன்று 29 ஏழு மணியளவில் இவ் விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைக்க மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார ,வ .ம.மாகாண அமைச்சர் சரத் இலங்க சிங்க ,முன்னாள் திறப்பனை பிரதேச சபை உறுப்பினர் அன்வர் சதாத் (பஸ்மி) ஆகியோர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன .
பெருந் திரலான பொது மக்கள் இவ் விளையாட்டுப் போட்டியை கண்டு கழிக்க வருகை தந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது .