எந்தவொரு சர்வதேச பிரஜைக்கோ அல்லது வேறு நாடுகளின் அகதிகளுக்கு இலங்கைக்குள் ஒருபோதும் இடமில்லை. இலங்கை பிரஜாவுரிமை கொடுத்து எவரையும் தங்கவைக்க அரசாங்கமோ அல்லது அமைச்சரவையோ தீர்மானம் எடுக்கவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் விடயத்தில் மனிதாபிமான முறையில் செயற்பட வேண்டும். நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

அமைச்சர் சம்பிக்க ரணவக்க ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் தொடர்பில் பொய்யான கருத்துக்களை கூறியதாக பொது எதரணி விமர்சித்து வரும் நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை குறிப்பிட்டார்.