சீனாவில் குரான் உள்ளிட்ட மதம் தொடர்பான அனைத்து பொருட்களையும் இஸ்லாமியர்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் ஆணையை பின்பற்றாத இஸ்லாமியர்கள் கடும் விளைவை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடமேற்கு சீனாவில் குடியிருக்கும் இஸ்லாமியர்களுக்கு குறித்த அதிரடி உத்தரவை ஆளும் அரசு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக Kashgar, Hotan உள்ளிட்ட மாகாணங்களில் குடியிருக்கும் மக்கள் இதை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் குறித்த ஆணையை சமூக வலைதளங்கள் வாயிலாகவும் மக்களுக்கு கொண்டுச்செல்லப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக குறிப்பிட்ட பகுதிகளில் குடியிருக்கும் இஸ்லாமியர்களை குறிவைத்து நெருக்கடி தந்து வரும் சீனா அரசு, குரானில் கலவரமூட்டும் பல பகுதிகள் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.