வவுனியா வேப்பங்குளத்தில் துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் விபத்து - ஒருவர் படுகாயம்
வவுனியா வேப்பங்குளத்தில் துவிச்சக்கர வண்டியுடன், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,
வவுனியா குருமன்காட்டில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழங்கையை நோக்கி செல்ல முற்பட்ட துவிச்சக்கர வண்டியில் மோதியதில் துவிச்சக்கரவண்டியில் சென்ற கணபதிப்பிள்ளை (வயது 70) படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.