இந்தியாவை சேர்ந்த டிரைவர் ஹர்கிரித் சிங், துபாயில் லாரி ஒட்டி வந்தார். 
அவர் லாரியை துபாயின் மேற்கு பகுதியில் உள்ள மார்ட்டிர்ஸ் சாலையில் ஒட்டி செல்லும்போது,மற்றொரு வாகனம் லாரியுடன் உரசியதால் திடீரென தீ பற்றிக்கொண்டு லாரி எரியத் தொடங்கியது.

டிரைவர் ஹர்கிரித் சிங் லாரியின் கதவை திறந்து கொண்டு கீழே குதித்தபோது அவரது உடையில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. அவர் அலறித் துடித்தார்.
அவ்வழியாக காரில் சென்ற ஒரு பெண், டிரைவர் உடலில் தீ எரிவதை பார்த்துவிட்டு காரை நிறுத்தினார். உடனே அவரது அபயாவை ( இஸ்லாமிய பெண்கள் அணியும் கறுப்பு மேலாடை) கழட்டி டிரைவர் மீது போட்டு தீயை அணைத்தார்.
தீ முற்றிலும் அணைந்துவிட்டதை உறுதி செய்துகொண்டு உடனே காரில் கிளம்பிவிட்டார்.

ஒரு சினிமா ஹீரோயின் போல செயல்பட்டு காப்பாற்றிய அந்த பெண்ணை டிரைவர் ஹர்கிரித் சிங் கையெடுத்து கும்பிட்டார்.
ஆனால், அந்த பெண் காரில் அங்கிருந்து புறப்பட்டு போய்விட்டார்.
தற்போது துபையில் வலைதளங்கள் முழுவதும் யார் அந்த பெருமைக்குரிய பெண்? அவரது ‘அபயாவை’ கழட்டி ஒரு உயிரை காப்பாற்றியுள்ளார்.
அந்த ஹீரோயின் பெண் யார் என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
போலீசாரும் அந்த பெண் குறித்து விசாரித்து வருகின்றனர். போலீசார் அந்த பெண்ணுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
எரிந்து கொண்டிருந்த லாரியை தீயணைப்புத் துறையினர் வந்து அணைத்தனர். ஆனாலும், லாரி முழுவதும் எரிந்துபோனது.