இலங்கை: பூஸா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகளை நலன் விசாரிக்கும் பொருட்டு பரிசுப் பொருட்களுடன் செல்லத் தீர்மானித்திருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று மாலை இடம்பெற்ற ஊடக அமைப்பொன்றுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.

ரோஹிங்கிய அகதிகள் எமது நாட்டுக்கு வரவேண்டுமென வரவில்லை. அவர்கள் பயணித்த படகு திசை மாறியதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கைக் கடற்பரப்பில் வைத்து பிடிபட்டனர். அந்த அப்பாவி மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவ வேண்டிய கடப்பாடு எமக்குண்டு.

அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்கள் மனிதர்களாக இருக்கவே முடியாது. மனிதாபிமானமற்ற வெறுக்கத்தக்க அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் எந்தத் வர்க்கத்தைச் சேர்ந்தவராயினும் அவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்களாவர்.