இலங்கை: இரு தினங்களுக்கு முன்னர் கண்டி வைத்தியசாலையில் நடந்த இரண்டாவது இருதய மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்த நிலையில் குறிப்பிட்ட யுவதி சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கண்டி வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதான சச்சினி செவ்வந்தி என்ற யுவதிக்கே இரு தினங்களுக்கு முன்னர் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பிட்ட பெண்ணின் இருதயத்தின் இயக்கம் 10 வீதம் என்ற மட்டத்தில் இருந்த நிலையிலேயே சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக அறிவிக்கபட்டு தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில். இன்று பகல் யுவதி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து கண்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்து உயிரிழந்த புளியத்த பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான நளிந்த பண்டார சகலசூரிய என்ற இளைஞனின் இருதயமே, இந்த யுவதிக்கு பொருத்தப்பட்டது.
குறிப்பிட்ட யுவதி அளுத்கமை பிரதேசத்தை சேர்ந்த சச்சினி செவ்வந்தி ஆவர். செவ்வந்தியின் மூத்த சகோதரரி இருதய நோய் காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், அவரின் குடும்பத்தினர் இவரையும் இழந்துள்ளது சோகமே.
கண்டி வைத்தியசாலையில் கடந்த ஜூலை மாதம் வெற்றிகரமான முதலாவது இருதய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சோகம்... கண்டி வைத்தியசாலையில் இருதய மாற்று சத்திர சிகிச்சை செய்த சச்சினி செவ்வந்தி சற்றுமுன்னர் உயிரிழந்தார் .