ஏ.ஆர்.எம்.ரபியுதீன் (ஊடகவியலாளர் –நாச்சியாதீவு)
ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி
நடைபெறவுள்ள உலக சிறுவர் தின தேசிய நிகழ்வுகள் இம்முறை அநுராதபுர மாவட்டத்திலும்
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .அநுராதபுர மாவட்ட நாச்சியாதீவு பிரதேச செயலகப்
பிரிவின் நாச்சியாதீவு சிங்கள மகா வித்தியாலயத்திலும் இடம் பெறுகின்றது.பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும்
சுமார் 2000 மாணவ
,மாணவியரும்,அவர்களின் பெற்றோர்களும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதோடு
,சமய,கலை ,கலாசாரத்தை பிரதி பலிக்கும் மாணவர்களின் முக்கிய நிகழ்வுகள் இங்கு இடம்
பெற உள்ளன .பல்வேறு போட்டி நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் மாணவ ,மாணவியருக்கு
பெறுமதியான பரிசில்கள் இங்கு வழங்கி வைக்கப்படவுள்ளன .
பிரதேசத்தின்
தமிழ்,சிங்கள,முஸ்லிம் பாடசாலைகள் ஒன்றினைந்து நடாத்தும் இந் நிகழ்வில் பல்வேறு
சமய கலாசாரங்களை பிரதிபலிக்கும் தோரணங்கள் ,கட்டவுட்கள் ,பெனர்கள் என்பன காட்சிப்
படுத்தப்படவுள்ளன.சாதி,இன,மத வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ளும் தேசிய
நிகழ்வுகளில் ஒன்றாக இம்மாத சிறுவர் தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை இங்கு
குறிப்பிடத்தக்கது .
அமைச்சர்கள் ,பிரதி அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண,பிரதேச
சபை உறுப்பினர்கள் ,கல்வி அதிகாரிகள் ,மற்றும் அரச அதிகாரிகள் ,உத்தியோகத்தர்கள்
,பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர் ,பழைய மாணவர்கள் என பலர் இந்
நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்க உள்ளனர் .