ஆப்கானிஸ்தானின் ஹெரத் பிராந்தியத்தில் உள்ள மசூதியொன்றில் செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஸியா மதப்பிரிவினரின் மசூதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மேலும் 64 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மாலைநேர தொழுகையின் போது ஓரு தற்கொலைகுண்டுதாரி தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கபிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் தன்னை வெடிக்கவைத்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள் இதன் பின்னர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் மறைந்திருந்த இரண்டாவது தற்கொலை குண்டுதாரி தன்னை வெடிக்கவைத்தாகவும் தெரிவித்துள்ளனர்
இதேவேளை மசூதிக்குள் நுழைந்த இரு தற்கொலை குண்டுதாரிகள் துப்பாக்கிபிரயோகம் மற்றும் கைக்குண்டுதாக்குதலில் ஈடுபட்டதாக மசூதிக்குள் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மசூதிக்குள் உள்ள உடல்களை காவல்துறையினர் பார்வையிடுவதையும் பொதுமக்கள் உடல்களை அப்புறப்படுத்துவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன