லண்டனில் உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் நடந்து வருகிறது. இப்போட்டியில் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த மின்னல் வீரர் என்றழைக்கப்படும் உசேன் போல்ட் 4*100 மீற்றர் ஓட்ட போட்டி நடைபெற்றது.
இப்போட்டிதான் உசேன் போல்ட்டின் கடைசி போட்டி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது, உசேன் போல்ட்டின் கடைசி போட்டி என்பதால் அரங்கு முழுவதும் ரசிகர்கள் கூடியிருந்தனர்.
இந்நிலையில் போட்டியின் போது 4-வது வீரராக ஆக ஓடிய உசேன் போல்ட் தனது பாணியில் கடைசி நேரத்தில் வேகமெடுத்து தனக்கு முன் ஓடுபவர் முந்தும் முயற்சியின் போது எதிர்பாராத விதமாக அவரது இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை கண்டதும் அரங்கமே அதிர்ச்சியில் உரைந்தது. இதையடுத்து அவருக்கு வீல் சேர் கொண்டு வரப்பட்டது. எனினும் அவர் கால் வலியுடன் நடந்தே சென்றார்.
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் உசேன் போல்ட் காயமடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.