பிபிபி செய்தி சேவையில் செய்தி வாசிப்பாளரொருவர் விளையாட்டு செய்தியை நேரலையில் வாசித்துக்கொண்டிருந்தபோது பின்புறத்தில் உள்ள ஒரு திரையில் ஆபாச வீடியோ ஒளிபரப்பாகிய சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பிபிசியில் பணியாற்றி வரும் ரவோத்(48 வயது) என்ற செய்திவாசிப்பாளர், லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டி தொடர் குறித்த செய்தியை வாசித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, இவருக்கு பின்புறத்தில் இருந்த ஒரு கணனியில் ஆபாச படம் ஒளிபரப்பாகியுள்ளது.குறித்த  நேரலையில் அந்த காட்சியும் சேர்ந்து ஒளிபரப்பாகியுள்ளது.
இந்த காட்சியை பார்த்த பார்வையாளரொருவர், தனது பேஸ்புக்கில் குறித்த காட்சியை படம் பிடித்து பதிவேற்றம் செய்து, ஒளிபரப்பான விளையாட்டு செய்தியில் இதனை யாராவது கவனித்தீர்களா என கேட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தற்போது இணையத்தில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.