இலங்கை கிரிக்கெட் தேசிய அணியில் முன்னணி வீரராக திகழ்ந்த உப்புல் சந்தனவின் தற்போதைய நிலை தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியில் 1992ஆம் ஆண்டு முதல் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த, உப்புல் சந்தன சிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.
தற்போது 45 வயதான உப்புல் சந்தன, தற்போது சிறிய வர்த்தகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
Nondescripts விளையாட்டு கழகம் அருகே விளையாட்டு உபகரண கடை ஒன்றை அவர் நடத்தி செல்கின்றார்.
அங்கு கிரிக்கெட் வீரர்களுக்கு அவசியமான உபகரணங்களுக்கு மேலதிகமாக டெனிஸ் விளையாட்டு உபகரணங்களையும் விற்பனை செய்கின்றார்.
காலியில் கிரிக்கெட் விளையாட்டுக்கு முகம் கொடுத்த அனுபவங்களின் போது இவ்வாறான கடை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக உப்புல் சந்தன தெரிவித்துள்ளார்.
“சிறு வயதில் நான் கிரிக்கெட் விளையாடும் போது ஒரு பந்தை மாதம் முழுவதும் பயன்படுத்துவேன். எங்களிடம் பெரிய அளவில் பணம் இல்லை. அதேபோன்று பந்தொன்றை கொள்வனவு செய்யக்கூடிய கடையொன்றும் இல்லை.
ஒரு முறை பந்தை கையில் எடுக்கும் போது அது இரண்டாக உடைந்து விட்டது. இவ்வாறு கடை ஒன்றை அமைக்க வேண்டும் என அன்று நான் நினைத்தேன்”என சந்தன மேலும் தெரிவித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சம்பியனானது. இந்தப் போட்டியில் விளையாடிய உப்புல் சந்தன வெற்றிக்கு வழி வகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.