திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆணும், பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது என்பது இந்திய கலாசாரத்திற்கு எதிராகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்தியாவின் ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழுவதை 1000 வருடங்களாக பின்பற்றி வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், ராஜஸ்தான் மாநிலத்தின் வாழும் Garasia பழங்குடி மக்கள் தான் இதை பின்பற்றி வருகிறார்கள்.
அதாவது, இங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு பிடித்த ஆண் அல்லது பெண்ணை தெரிவு செய்து கொள்ளலாம்.
பிறகு திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக இருவரும் வாழ அவர்களின் சமூகம் அனுமதி அளிக்கிறது.
இருவரும் ஒன்றாக வாழ்க்கையை நடத்த போதிய பணம் இருக்கிறது என்ற நிலை வரும் போது அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.
திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் ஜோடி குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும்.
அப்படி முடியவில்லையெனில், இணைந்து வாழும் நபரை விட்டு பிரிந்து வேறு ஆண் அல்லது பெண்ணை தெரிவு செய்து அவர்களுடன் வாழலாம்.
இணைந்து வாழும் ஜோடி திருமணம் செய்து கொண்டால், மணமகனின் குடும்பம் மணமகள் குடும்பத்துக்கு குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டும்.
இங்கு பெண்களுக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்படுவதால் அவர்கள் வேறு ஆணுடன் வாழ விரும்பினால் அதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த சூழலில் பெண்ணின் வாழ்க்கையில் புதிதாக வரும் ஆண், பழைய நபருக்கு அதிக பணம் கொடுக்க வேண்டியது கட்டாயமாகும்.
இப்படி பெண்களுக்கு அதிக உரிமை அளிக்கப்படுவதால் பெண்கள் பயமில்லாமல் வாழ்வதுடன் இங்கு கற்பழிப்பு, வரதட்சணை மரணங்கள் மிக குறைவாகவே நடக்கிறது.
இங்கு வசிக்கும் நிர்மல் சிங் கூறுகையில், எங்களை போல வெளி மக்கள் வாழ்கிறார்களா என தெரியவில்லை. ஆனால் ஆயிரம் வருடங்களாக நாங்கள் இப்படி தான் வாழ்கிறோம் என கூறியுள்ளார்.