பினைமுறி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய அவர் பதவி விலகுவதாக அறிவித்தார்.
தான் பதவி விலகுவது தொடர்பில் கவலைப்படவில்லை என்றும் இந்த சபைக்கு கௌரவமளித்து தனது பதவி விலகுவதில் பெருமைப்படுவதாகவும் ரவி கருணாநாயக்க தனது உரையில் குறிப்பிட்டார்.
‘நிச்சயமாக சத்தியம் வென்றே தீரும் அசத்தியம் அழிந்தே தீரும்’ என்ற புனித குர்ஆன் வசனத்தின் படி நிச்சயம் சரியான தீர்வு கிடைக்கும் என்று அமைச்சர் ஆற்றிய உருக்கமான உரையில் அவர் கூறியிருந்தமை விசேட அம்சமாகும்.