ஹட்டன் மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.
ஹட்டன் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் முயற்சியின் போது பாதுகாப்பு கடமையில் ஈடுட்ட பொலிஸ் அதிகாரி துப்பாக்கி சூட்டில் பலியானமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று காலை 10 மணியளவில் நீதிமன்ற வளாகத்தில் ஆர்பாட்டம் இடம்பெற்றது.
யாழ் நீதிமன்ற நீதவான் இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டு தாக்குதல் சம்பவமானது நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
சுமார் ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்பாட்டமானது, அமைதியான முறையில் இம்பெற்றதுடன், ஹட்டன் மாவட்ட நீதிமன்ற செயற்பாடுகள் முற்றாக செயழிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டம் முடிந்த பின் இன்று முழுநாளும் நீதிமன்ற செயற்பாடுளிலிருந்து விலகியிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சட்டதரணிகள் தெரிவித்தனர்.