அத்தனகல்ல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
வழக்கு விசாரணைகளுக்காக இன்று குறித்த சந்தேகநபர், நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதன்போது, தப்பிச் செல்ல முற்பட்ட அவர் மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காயமடைந்த குறித்த சந்தேகநபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.