ராகம - பெசிலிகா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து ஜூன் 26 ஆம் திகதி வேன் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த சுமார் 78 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கார் ஒன்றில் வந்த கொள்ளையர்கள் வீதியை மறித்து வேனின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர் இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.