யேமனில் 3 வயது குழந்தை மீது பாலியல் குற்றம் புரிந்து கொலை செய்த ஒருவருக்கு தலையில் துப்பாக்கிச்சூடு நடத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சனா நகரில் மொஹமட் அல்-மக்ஹ்ராபி (41) என்பவருக்கே இந்தத் தண்டனை வழக்கப்பட்டுள்ளது.
ஷரிஆ சட்டத்தின் பிரகாரம் குறித்த நபருக்கு தண்டனை வழங்கியதாக அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பொது இடத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டதுடன் தொலைக்காட்சி ஊடகங்கள் அதனை நேரடியாக ஒளிபரப்பு செய்திருந்தன.